வாசகர்களுக்கு நன்றி
ஜனவரி 27, 2026 அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். இதுவரை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய ஆறு கண்டங்களில் உள்ள பல நாடுகளில் வாழம் தமிழர்கள் - ஏறத்தாழ 24 இலட்சம் (2.4 மில்லியன்) வாசகர்கள் - என்னுடைய வலைப்பதிவுகளைப் பார்த்திருக்கிறார்களள். அவர்களுள் பலரும் பல பதிவுகளைப் படித்திருக்கிறார்கள். சிலர் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் அளித்திருக்கிறார்கள். சிலர் என்னோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். இதுபோல் இத்துணை பேர் என்னுடைய பதிவுகளைப் பார்ப்பதும் படிப்பதும் எனக்குப் பெருமகிழ்ச்ச்சி அளிக்கிறது. வாசகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்புடன், பிரபாகரன்