பத்துப்பாட்டு பாடல்களுக்கு உரைகள் - ஜனவரி 26, 2026
ஜனவரி 27, 2026
அன்பிற்குரிய
வாசகர்களுக்கு,
வணக்கம்.
கடந்த
சில ஆண்டுகளாக நான் சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாகிய பத்துப்பாட்டு நுல்களைப் படித்து,
அதிலுள்ள பத்துப் பாட்டுகளுக்கும் எளிய உரையை எழுதி அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன்.
பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள்: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை,
பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறபாணாறுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி.
அந்தப்
பதிவுகளுக்கான பட்டியலையும் அவற்றிற்கான சுட்டிகளையும் https://myblogslist2023.blogspot.com
என்ற பதிவில் காணலாம்
பத்துப்பாட்டிலுள்ள
பாட்டுகள் சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல், விருந்தோம்பல், உணவு வகைகள், மன்னர்களின்
கொடைத்திறம், ஆகியவற்றை மிகைப்படுத்தாமல், புனைந்துரைகள் எவையும் இல்லாமல், தெள்ளத்தெளிவாகக்
காணொலிபோல் காட்டுகின்றன. இந்தப் பாட்டுகள் மிக நீண்ட பாடல்களாக இருப்பதால் அவற்றைப்
பள்ளி அல்லது கல்லூரிப் பாடநூல்களில் சேர்ப்பதில்லை. ஆகவே நம்மில் பலரும் அவற்றைப்
படித்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய உரையில் ஒவ்வொரு பாட்டின் மூலம், பாட்டுக்கு அறிமுகம், அருஞ்சொற்களுக்குப் பொருள், பதவுரை, கருத்துரை மற்றும்
பாட்டின் பொருட்சுருக்கம் ஆகியவற்றை அளித்திருக்கிறேன். அவற்றை முழுமையாகப் படிக்க
நேரமில்லை என்றாலும், அறிமுகம், பொருட்சுருக்கம் ஆகியவற்றை எளிதாகப் படிக்க முடியும்.
சங்க இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் பத்துப்பாட்டுப் பாடல்களுக்கு என்னுடைய உரைகளைப்
படித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
பிரபாகரன்
Comments
Post a Comment