டோக்கியோவில் திருக்குறள் ஆவணப்பட வெளீயீடு
ஜனவரி 31, 2026
டோக்கியோவில் திருக்குறள் ஆவணப்பட வெளீயீடு
திருக்குறளில் உள்ள அரிய கருத்துகளை பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய
வகைவில் ஒரு விரிவான ஆவணப்படம் இதுவரை எந்த மொழியிலும் எவராலும்
எடுக்கப்படவில்லை. நான்
அண்மையில் கதை வசனம் எழுதி,
The Ageless Wisdom of the Indian Poet and Philosopher Thiruvalluvar
என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றி ஓர் ஆவணப்படம் தயாரித்தேன்.
அந்தப் படத்தின் இயக்குநர் தேசிய விருதுபெற்ற புகழ்பெற்ற இயக்குநர் அம்ஷன்
குமார். அந்தப் படம் நவம்பர் 26, 2025 அன்று தமிழ் இருக்கைக் குழுமம் என்ற
நிறுவனத்தால் அமெரிக்காவில்
வாஷிங்டன் வட்டாரத்தில் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தை வலையொளியில் (YouTube
ல்) பார்க்கலாம். அதற்கான
சுட்டி: https://youtu.be/0yuT5rSzKDk
கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அந்தப் படத்தைப்
பார்த்திருக்கிறார்கள்; பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்பொழுது அந்தப் படம், ஹிந்தி, ஜப்பானியம், ஃபிரெஞ்ச், தமிழ் ஆகிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்படுள்ளது. வேறு சில மொழிகளிலும் அந்தப் படத்தை
மொழிபெயர்ப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் படத்தின் ஜப்பானிய
மொழிபெயர்ப்பு, ஜனவரி, 31, 2026 அன்று டோக்கியோவில் வெளியிடப்பட்டது. அந்தப்
படத்திற்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தப் படத்தின் மற்ற
மொழிபெயர்ப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
Comments
Post a Comment