Posts

Showing posts from January, 2026

வாசகர்களுக்கு நன்றி

  ஜனவரி 27, 2026 அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். இதுவரை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய ஆறு கண்டங்களில் உள்ள பல நாடுகளில் வாழம் தமிழர்கள்   - ஏறத்தாழ 24 இலட்சம் (2.4 மில்லியன்) வாசகர்கள்   - என்னுடைய வலைப்பதிவுகளைப் பார்த்திருக்கிறார்களள். அவர்களுள் பலரும் பல பதிவுகளைப் படித்திருக்கிறார்கள். சிலர் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் அளித்திருக்கிறார்கள். சிலர் என்னோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். இதுபோல் இத்துணை பேர் என்னுடைய பதிவுகளைப் பார்ப்பதும் படிப்பதும் எனக்குப் பெருமகிழ்ச்ச்சி அளிக்கிறது. வாசகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்புடன், பிரபாகரன்     

பத்துப்பாட்டு பாடல்களுக்கு உரைகள் - ஜனவரி 26, 2026

  ஜனவரி 27, 2026 அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். கடந்த சில ஆண்டுகளாக நான் சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாகிய பத்துப்பாட்டு நுல்களைப் படித்து, அதிலுள்ள பத்துப் பாட்டுகளுக்கும் எளிய உரையை எழுதி அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள்: முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறபாணாறுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி.   அந்தப் பதிவுகளுக்கான பட்டியலையும் அவற்றிற்கான சுட்டிகளையும் https://myblogslist2023.blogspot.com என்ற பதிவில் காணலாம்   பத்துப்பாட்டிலுள்ள பாட்டுகள் சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல், விருந்தோம்பல், உணவு வகைகள், மன்னர்களின் கொடைத்திறம், ஆகியவற்றை மிகைப்படுத்தாமல், புனைந்துரைகள் எவையும் இல்லாமல், தெள்ளத்தெளிவாகக் காணொலிபோல் காட்டுகின்றன. இந்தப் பாட்டுகள் மிக நீண்ட பாடல்களாக இருப்பதால் அவற்றைப் பள்ளி அல்லது கல்லூரிப் பாடநூல்களில் சேர்ப்பதில்லை. ஆகவே நம்மில் பலரும் அவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய உரையில் ஒவ்வொரு பாட்டின் மூலம்...

பதிவுகளின் பட்டியல்

  ஜனவரி 26, 2026 அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். இதுவரை நான் இருபது வலைப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். https://myblogs2023.blogspot.com என்ற பதிவில் ன்னுடைய   பதிவுகளின் பட்டியல் உள்ளது. அன்புடன், பிரபாகரன்